காயமடைந்த 4 பேரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அப்போது திடீரென மருத்துவமனையில் இரண்டு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நோயாளிகள், ஊழியர்கள் அலறியடித்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து உளுந்தூர்பேட்டை போலீசார் சென்று தகராறில் ஈடுபட்ட அனைவரையும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினர். இந்த மோதல் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து இரண்டு தரப்பையும் சேர்ந்த ஏழுமலை, மோகன், சேகர், சக்திவேல் செல்வராஜ், சம்பந்தம் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரசு மருத்துவமனையில் பயங்கர மோதல்: டாக்டர்கள், ஊழியர்கள் ஓட்டம்; 6 பேர் கைது appeared first on Dinakaran.
