அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகி கைது

சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் ரோடு போஸ் காலனியை சேர்ந்தவர் முருகானந்தம் (39). பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரிடம் சிவகாசி பாமக நகரத் தலைவர் பாண்டீஸ்வரன் (எ) கொய்யாபாண்டி (41), கடந்த மாதம் ரூ.5.13 லட்சத்துக்கு பட்டாசு வாங்கியுள்ளார். இதற்கான பணத்தை கொடுக்காமல் மீண்டும் 50 பட்டாசு பார்சல் வேண்டும் என்று கேட்டுள்ளார். முருகானந்தம் பட்டாசு தர மறுக்கவே, ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து பாண்டீஸ்வரனை நேற்று கைது செய்தனர். மற்றொரு பட்டாசு ஏஜன்டான ரஞ்சித்குமாரை தேடி வருகின்றனர். கைதான பாண்டீஸ்வரன், அன்புமணி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தன்னை காரில் கடத்தி தாக்குதல் நடத்தியதாக பாண்டீஸ்வரன் அளித்த புகாரில் ஆசிரியர் சுப்புராஜ் (41), விஜய் (26), பாலமுருகன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: