ஊட்டி,ஜூலை5: நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் கறி பீன்ஸ் விலை கிலோ ரூ.100ஐ எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தேயிலை விவசாயமே செய்து வருகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஊட்டி, குன்னூர் மற்றும் குந்தா தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிகளவு மலை காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரியில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், முள்ளங்கி,பீன்ஸ், பட்டாணி, அவரை உட்பட பல்வேறு காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில், ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளான விவசாயிகள் கேரட், பீன்ஸ் மற்றும் பீட்ரூட் ஆகியற்றை அதிகளவு உற்பத்தி செய்து வருகின்றனர்.
The post கறி பீன்ஸ் விலை கிடுகிடு கிலோ ரூ.100க்கு விற்பனை appeared first on Dinakaran.
