ஃபுளோரிடா: அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்-வாஷிங்டன் ஃபிரீடம் அணிகள் மோதின. மழை காரணமாக ஒவர்களின் எண்ணிக்கை தலா 5ஆக குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய டெக்சாஸ் 5ஓவரில் 2விக்கெட் இழப்புக்கு 87ரன் குவித்தது. அடுத்து விளையாடிய வாஷிங்டன் 5ஓவர் முடிவில் 4விக்கெட் இழப்புக்கு 44ரன் மட்டுமே எடுத்தது. அதனால் 43ரன் வித்தியாசத்தில் 6வது வெற்றியை வசப்படுத்திய டெக்சாஸ் 2வது இடத்துக்கு முன்னேறியது. வாஷிங்டன் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
The post 2வது இடத்தில் டெக்சாஸ் appeared first on Dinakaran.