நமது அடையாளம், கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளம், கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்கவோ, மறக்கவோ கூடாது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று மேற்குவங்கம் உருவான நாள் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
நமது நாடு பல வேற்றுமைகளை கொண்ட நாடு. இங்கு ஏதாவது நடந்தால் மேற்கு வங்காளத்தில் எதிர்வினை இருக்கும். அங்கு ஏதாவது நடந்தால் தமிழ்நாட்டில் எதிர்வினை உணரப்படும். மேற்குவங்கம் தனியாக பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டில் அதற்கு எதிர்வினை இருந்தது. அரசின் அழுத்தங்களால் இந்த ஒற்றுமை கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது. மொழியால் மக்கள் தங்களை பிரித்துக் கொண்டார்கள்.

எத்தனையோ ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆண்டார்கள். ஆனால் யாராலும் மக்களின் ஒற்றுமையை எதுவும் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடிய போது அது எதிரொலித்தது. விளிம்பு நிலையிலிருந்து நாம் இன்று உலகத்தின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்து வருகிறோம். மேற்குவங்க பிரிவினையின் போது 40 சதவீதத்திற்கும் மேல் இந்துக்கள் இருந்தார்கள். தற்போது 18 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு என்ன ஆனது, எங்கே சென்றார்கள், பலர் இடம்பெயர்ந்து விட்டார்கள். நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளம், கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்கவோ, மறக்கவோ கூடாது. தமிழ்நாட்டில் வாழும் மேற்குவங்க மக்கள் இதனை சிறப்பாக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

The post நமது அடையாளம், கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: