நீட் முதுநிலை 2025 தேர்வில் முறைகேடு செய்து, ரூ.90 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற உதவியதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு:
தரம், தரம் என்றார்கள்! நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு ஒழுக்கமான ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான். நீட்- முதல் கோணல் முற்றிலும் கோணல்! ஆர்எஸ்எஸ்- பாஜ மாநாடுகளில் காட்சிப்பொருளாக-உட்கார நேரமிருக்கும் அதிமுகவினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!”
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post நீட்-முதல் கோணல் முற்றிலும் கோணல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் appeared first on Dinakaran.