5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ், பாஜக மற்றும் TMC தலா ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் 10,792 வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அங்கு பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையை தொடர்ந்து பாஜக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குஜராத்தில் 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் பாஜகவும், மற்றொரு தொகுதியில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகிக்கின்றன.
The post குஜராத், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களின் இடைத் தேர்தல் முடிவுகள் : பாஜகவுக்கு பெரும் பின்னடைவு !! appeared first on Dinakaran.