பஹல்காம் பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் அகமது ஜோதர் மற்றும் பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரும் பாகிஸ்தானை தளமாக கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் தளவாட ஆதரவை வழங்கியதாக NIA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு முன், பயங்கரவாதிகளை ஹில் பார்க் பகுதியில் உள்ள ஒரு தற்காலிகக் குடிசையில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. NIA கூற்றுப்படி, விசாரணையின்போது, பர்வேஸ் மற்றும் பஷீர் தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளங்களை வெளியிட்டனர். அவர்கள் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தினர். இந்த இருவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 இன் பிரிவு 19 இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது appeared first on Dinakaran.