அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுகளில் ஏராளமான மாடுகள் உலாவருவதால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். திடீரென வேகமாக மாடுகள் ஓடும்போது பொதுமக்கள் மீது மோதி காயம் அடைந்து வந்தனர். இதனால் அச்சுறுத்தலாக உள்ள மாடுகளை பிடிக்கவேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் புகார் கொடுத்து மார்க்கெட்டில் சுற்றிவரும் மாடுகளை பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அத்துடன் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதியை சந்தித்து புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேற்று மார்க்கெட்டில் ஆய்வு செய்தபோது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அங்காடி நிர்வாக ஊழியர்கள் 26 பேர் சென்று மார்க்கெட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களை வர வைத்து பேசினர். பின்னர் அவர்களிடம் பேசி எச்சரிக்கை விடுத்ததுடன் 60 ஆயிரம் அபராதம் விதித்து மாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். ‘’மாடுகள் மார்க்கெட் வளாகத்திற்குள் வராதபடி வீட்டில் கட்டிப்போட்டு பராமரிக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து .60 ஆயிரம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.