கண்ட படத்தை போடாதே பட்டாசு வெடிக்காதே.. விஜய் ரசிகர்களுக்கு புது கட்டுப்பாடு

சென்னை: சமீபத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய போராட்ட கூட்டமாக இருக்கட்டும், மதுரை விமான நிலையம் வழியாக திரைப்பட ஷூட்டிங் சென்றபோதாக இருக்கட்டும், தவெக தொண்டர்கள் செய்த அலப்பறைகளால் பொது சொத்துகள் சேதமடைந்தன. இதனை கருத்தில் கொண்டு தற்போது தொண்டர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இது 2026 சட்டமன்ற தேர்தல் பரப்புரை காலம் என்பதால் கட்சியின் கொள்கைகள் மற்றும் தலைமையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்தவொரு செயல்பாடுகளும் தொண்டர்கள் மேற்கொள்ளக் கூடாது. வீடுவீடாக நடைபெறும் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில், தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அனுமதித்த ஸ்டிக்கர்கள், வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சுவர் எழுத்துகள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றிலும் இதே நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். அனுமதிக்கப்படாத எந்தவொரு வாசகங்களையோ, புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது. தேர்தல் பரப்புரை, தெருமுனைக் கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட செயல்பாடுகளில், தலைமைக் கழக அங்கீகாரம் இல்லாத பேனர் டிசைன்கள், இலச்சினைகள், வாசகங்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

தலைவர் விஜய் சார்ந்த தகவல்கள் மட்டுமே பரப்புரை செய்ய வேண்டும். எந்தவொரு பொதுக் கூட்ட நிகழ்ச்சியிலும் தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக்கூடாது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் சிரமம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கண்ட படத்தை போடாதே பட்டாசு வெடிக்காதே.. விஜய் ரசிகர்களுக்கு புது கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: