‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ ஆவடி வட்டம் தேர்வு நாளை கள ஆய்வு

திருவள்ளூர், ஜூன் 17: “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” 18ம் தேதி ஆவடி வட்டம் தேர்வு என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் ஒவ்வொரு மாதமும் 3வது புதன்கிழமையன்று ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஜூன் – 2025 மாதத்திற்கான கள ஆய்விற்கு 18ம் தேதி ஆவடி வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ ஆவடி வட்டம் தேர்வு நாளை கள ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: