மேலும், கணவர் தன்னை விட்டுச் சென்ற பிறகு தனது குழந்தைகள் தனியாக வசித்து வருவதாகவும், 5 நாட்களுக்கு மணமகள் போல் நடித்தால் ரூ.50 ஆயிரம் தருவதாக புரோக்கர்கள் கூறிய வார்த்தைகளை நம்பி இவ்வாறு செய்ததாக பல்லவி கூறினார். மேலும் தனது பெயர் பல்லவி அல்ல, அமானி எனவும், ரூ.50 ஆயிரம் தருவதாக கூறிய புரோக்கர்கள் ரூ.35 ஆயிரம் மட்டுமே கொடுத்தார்கள் என கூறினார். இதுகுறித்து விஜயவாடா கிருஷ்ணா லங்கா போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
The post திருமண புரோக்கர்கள் ரூ.3.5 லட்சம் நூதன மோசடி ரூ.50 ஆயிரத்துக்கு மணப்பெண்ணாக நடித்த 2 குழந்தைகளின் தாய்: விஜயவாடா போலீசார் விசாரணை appeared first on Dinakaran.