பெங்களூருவில் ரூ.10 கோடி போதை பொருள் பறிமுதல்: ஆப்பிரிக்க பெண் கைது

பெங்களூரு: பெங்​களூரு​வில் ராஜனு குண்டே அருகே ஆப்​பிரிக்க பெண் ஒரு​வர் போதை பொருள் விற்​பனை செய்​வ‌​தாக குற்​றப்​பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில், ஆப்​பிரிக்க பெண் அகின்​வுமி பிரின்​சஸ் (25) எம்​டிஎம்ஏ எனப்​படும் போதை பொருளை வைத்​திருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அவரது வீட்​டில் சோதனை நடத்​தி 5.32 கிலோ எம்​டிஎம்ஏ போதைப் பொருள்களை கைப்பற்றினர்.

அவரை கைது செய்​து, விசாரித்ததில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் என்பதும், 2022ம் ஆண்டு படிப்​ப​தற்​காக தெலங்​கானா வந்​ததும் அங்கிருந்து பெங்களூரு வந்து போதைப் பொருள் விற்றுள்ளார் என்பது தெரியவந்தது. அவரிடம் கைப்பற்றப்பட்ட எம்​டிஎம்ஏ போதைப்​பொருளின் சர்​வ​தேச சந்தை மதிப்பு ரூ.10 கோடி என போலீசார் தெரிவித்தனர். அவ‌ர் மீது போதைப் பொருள் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ், வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது.

The post பெங்களூருவில் ரூ.10 கோடி போதை பொருள் பறிமுதல்: ஆப்பிரிக்க பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: