சேந்தமங்கலம், ஜூன் 16: கொல்லிமலை அருகே டூவீலர் மீது ஆட்டோ மோதியதில், கல்லூரி மாணவர்கள் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சபரி(22), தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் தரணிகுமார்(24). இவர், தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இருவரும் டூவீலரில் நேற்று கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
சித்தூர் நாடு பள்ளக்குளிப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மினி ஆட்டோ டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post ஆட்டோ மோதி மாணவர் உள்பட 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.