லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில் மூர்த்தி அணி வெற்றி

திருச்செங்கோடு, ஜூலை 22: திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில் கேபிஆர் மூர்த்தி அணி வெற்றி பெற்றது. திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு 2025-28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கேபிஆர்(எ) மூர்த்தி அணி வெற்றி பெற்றது. தலைவராக கேபிஆர்(எ) மூர்த்தி வெற்றி பெற்றார். இவர், 1437 வாக்குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட செங்கோட்டுவேலுக்கு 739 வாக்குகள் கிடைத்தது. செயலாளராக மோகன்ராஜ் தேர்வு பெற்றார். இவர் 1356 வாக்குகளும், எதிர்த்து நின்ற சுப்பிரமணியம் 801 வாக்குகளும் பெற்றனர்.

பொருளாளராக செல்வராஜ் வெற்றி பெற்றார். இவர் 1328 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட முத்துசாமி 818 வாக்குகளும் பெற்றனர். உபதலைவராக சின்னசாமி 1307 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட ரமேஷ் 835 வாக்குகள் பெற்றார். உபசெயலாளராக செல்வராஜ் 1346 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட குமரவேல் 787 வாக்குகள் பெற்றார்.

மேலும், செயற்குழு உறுப்பினர்களாக ஜெயலட்சுமி, கார்த்திகேயன், வைகை குமார், புள்ளிபாளையம் கார்த்திகேயன், நந்தகுமார், தீனதயாளன், கந்தசாமி, ஜெய, மூர்த்தி, சதீஷ்குமார், இளையராஜா, சக்திவேல், பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, தாமரைக்கண்ணன், செங்கோட்டையன், செல்வராசு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் தேர்தலை நடத்தினர். தேர்தலையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தலில் மூர்த்தி அணி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: