ஊட்டி, ஜூன் 14: ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கோத்தகிரி அருகே ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு நாள் முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.நஞ்சுண்டன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி 18 வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் பள்ளியில் சேராமல், படிக்காமல் இருக்கக்கூடாது.
எந்த காரணம் கொண்டு படிப்பதை விட்டுவிட்டு குழந்தைத்தொழிலாளராக வேலை செய்தல் கூடாது. இப்படி வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் பெற்றோருக்கு குறைந்த பட்சம் ரூ.500 தண்டனையும் 6 மாதம் சிறைச்சாலையும் அரசாங்கத்தால் வழி வகுக்கப்பட்டு இருக்கிறது’’ என்றார். மேலும் ‘குருவி தலையிலே பனங்காய பாருங்க’ என்ற ஒரு குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு பாடலை பாடினார். இதில், சமூக ஆர்வலர் இந்து சுரேஷ், மருத்துவர் திவ்யா, உறுப்பினர் அனோடை காரி, ஆசிரியர் கமலா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
The post குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.