நெல்லை வண்ணார்பேட்டையில் நெரிசல்மிக்க சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய கால்நடைகளால் வாகனஓட்டிகள் அவதி

*காவல் துறை நிரந்தரத்தீர்வு காண கோரிக்கை

நெல்லை : நெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் நேற்று காலையில் கால்நடைகள் குறுக்கு நெடுக்காக ஓடியதால் வாகன ஓட்டிகள் பதறியபடி சென்றனர். இதுகுறித்து பல முறை மாவட்ட, மாநகர நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என புலம்பும் மக்கள் இதுவிஷயத்தில் காவல் துறை தீவிரமாக கண்காணித்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சியில் பாளை மார்க்கெட் சாலை, தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா, குறிச்சி ரயில்வே கேட் பகுதி, சந்திப்பு மதுரைசாலை, தச்சநல்லூர் மதுரை சாலை ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நெருக்கடியான சாலைகளில் கால்நடைகள் குறுக்கு நெடுக்காக செல்வதால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர். இதனால் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்ைகயின் மீது நடவடிக்கை முழுமையாக எடுக்கப்படாத நிலைதொடர்கிறது.

இந்நிலையில் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் ரவுண்டானாவில் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பாளை பகுதிக்கும் பாளையில் இருந்து சந்திப்புக்கும் மற்றும் வடக்கு – தெற்கு பைபாஸ் சாலையில் இருந்தும் வாகனங்கள் வண்ணார்பேட்டையை கடந்து செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்படும் பகுதியாகும்.

போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் நேற்று காலை கால்நடைகள் குறுக்கு நெடுக்காக சென்றன. எங்கிருந்து வந்தது யார் ஓட்டிவந்தார்கள் என்பது கூட தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் கால்நடைகள் எங்கு செல்வது என்று தெரியாதை வகையில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்றன. இதனால் நான்கு திசைகளிலும் இருந்து வரும் வாகனங்கள் தட்டுதடுமாறி சென்றன.

இதில் காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி, பணிகளுக்கு செல்பவர்கள் அவசரகதியில் வண்ணார்பேட்டைய கடந்து செல்ல பயணிக்கும் நேரத்தில் கால்நடைகள் அடிக்கடி சாலைகளில் குறுக்கீடு செய்வதால் வாகன ஓட்டிகள் திணறிவருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை என புலம்பி தவிக்கும் பொதுமக்கள் இதுவிஷயத்தில் காவல் துறை தீவிரமாக கண்காணித்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெல்லை வண்ணார்பேட்டையில் நெரிசல்மிக்க சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய கால்நடைகளால் வாகனஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: