சேலம், ஜூன் 13: தமிழகம் முழுவதும் மெத்தனால் மற்றும் எத்தனால் போன்ற ஆபத்தான வேதி பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு சிறப்பு எஸ்ஐ தர் ஆகியோர் சேலம் மாநகர பகுதிகளில் உள்ள வேதி பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களில் சட்ட விரோதமாக மெத்தனால், எத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா? என திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோதமாக விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அந்தந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
The post சட்ட விரோதமாக மெத்தனால், எத்தனால் விற்றால் நடவடிக்கை appeared first on Dinakaran.