ஜார்க்கண்ட், கர்நாடகா, ஆந்திராவில் 2 ரயில் பாதை திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஜார்க்கண்ட், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வழியாக 7 மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் 2 ரயில் பாதை திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ரூ. 6,405 கோடி மதிப்பிலான 2 கூடுதல் ரயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோடெர்மா – பர்கானா இரட்டைப் பாதைத் திட்டம் (133 கி.மீ.) ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சுரங்கப் பகுதி வழியாக செல்லும் ரயில் பாதையாகவும், பாட்னா-ராஞ்சி இடையே குறைந்த தூர ரயில் இணைப்பு பாதையாகவும் இருக்கும். பல்லாரி – சிக்ஜாஜூர் இரட்டைப் பாதைத் திட்டம் (185 கி.மீ.) கர்நாடகா மாநிலம் பல்லாரி, சித்ரதுர்கா மாவட்டங்கள், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் வழியாக செல்கிறது. இந்த 2 திட்டங்களும் ரயில்வே கட்டமைப்பில் மேலும் 318 கிமீ தொலைவிற்கு ரயில் பாதையை கணிசமான அளவு அதிகரிக்க உதவும்.

The post ஜார்க்கண்ட், கர்நாடகா, ஆந்திராவில் 2 ரயில் பாதை திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: