புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி இந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரானில் எழுதியுள்ள கட்டுரையில், காசாவின் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசின் எதிர்வினை மற்றும் பழிவாங்கல்கள் மிகவும் மோசமானவை மட்டுமல்ல முற்றிலும் குற்றமானது என்பதை ஒப்புக்கொள்வது நமது பொறுப்பு. காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கையானது இனப்படுகொலைக்கு சமம். மனிதகுலத்திற்கு எதிரான இந்த அவமானத்திற்கு எதிராக பிரதமர் மோடி அரசானது ஊமை பார்வையாளராக இருக்கிறது. இது நமது அரசியலமைப்பு மதிப்புக்களுக்கு ஒரு கோழைத்தனமான துரோகம். காசா மக்கள் மீதான இடைவிடாத மற்றும் பேரழிவு தம் தாக்குதலுக்கு பிரதமர் மோடியின் மவுனம் வெட்கக்கேடானது. இது ஆழ்ந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது. இது தார்மீக கோழைத்தனத்தின் உச்சமாகும். இந்தியா நீண்டகாலமாக பிரதிநிதித்துவப்படுத்தி வரும் மரபின் சார்பாக தெளிவாக, தைரியமாக மற்றும் வெளிப்படையாக பிரதமர் பேச வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.
The post காசா மீதான தாக்குதல் மோடியின் மவுனம் வெட்கக்கேடானது: சோனியா சாடல் appeared first on Dinakaran.