இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் உக்ரைனுக்கு எதிராக போரை ரஷ்யா நிறுத்தவில்லை. இந்நிலையில் உக்ரைன் மிக கடுமையாக தாக்கப்பட்டு வருவதாகவும் கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே உக்ரைனுக்கு ரூ.2781கோடி மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் ஒப்புதல்அளித்துள்ளது. இதில் அமெரிக்க கவச வாகனங்களின் விநியோகம், பராமரிப்பு, பழுதுபார்ப்புகாக ரூ.1295கோடி மற்றும் வான் ஏவுகணை அமைப்புகளுக்கு ரூ.1485கோடியும் அடங்கும்.
The post உக்ரைனுக்கு ரூ.2781 கோடிக்கு ஆயுத விற்பனை: அமெரிக்க வெளியுறவு துறை ஒப்புதல் appeared first on Dinakaran.
