உலகில் மிகவும் விரும்பப்படும் தலைவர் பிரதமர் மோடிக்கு மீண்டும் முதலிடம்: அமெரிக்க ஆய்வில் தகவல்


நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தரவு ஆய்வு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம், உலகத் தலைவர்களின் மக்கள் செல்வாக்கு குறித்துத் தொடர்ந்து ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள 2குளோபல் லீடர் அப்ரூவல் ரேட்டிங்’ எனப்படும் புதிய ஆய்வறிக்கையின்படி, இந்தியப் பிரதமர் மோடி, 75% மக்கள் ஆதரவுடன் உலகிலேயே மிகவும் விரும்பப்படும் தலைவராக மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவரை 20% பேர் மட்டுமே ஏற்கவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு ஜூன் 12 முதல் 18ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தப் பட்டியலில், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 61% மக்கள் ஆதரவுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மற்ற முக்கிய உலகத் தலைவர்களின் நிலை மிகவும் பின்தங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43% ஆதரவுடனும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 41% ஆதரவுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 37% ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (31%), இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் (25%), பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (25%) ஆகியோர் மிகவும் குறைவான மக்கள் ஆதரவையே பெற்றுள்ளனர். ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்த குடிமக்களிடம் நேர்காணல் நடத்தி, அதன் அடிப்படையில் இந்த மதிப்பீடுகளைத் தயாரிக்கிறது. உலக அரங்கில் பிரதமர் மோடியின் செல்வாக்கு தொடர்ந்து வலுவாக இருப்பதையே இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

The post உலகில் மிகவும் விரும்பப்படும் தலைவர் பிரதமர் மோடிக்கு மீண்டும் முதலிடம்: அமெரிக்க ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: