நிதி நிறுவனம் பைக்கை பறித்ததால் நடுரோட்டில் வாலிபர் தீக்குளிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி ரயில் நிலையம் முன்புள்ள நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தீக்குளித்த வாலிபர் நாகர்கோவில் இடலாக்குடி யானைப்பாலம் பகுதியை சேர்ந்த விஷ்ணுநிதி(29) என்பதும், தனியார் நிதி நிறுவனத்தின் பைனான்ஸ் மூலம் பைக் வாங்கியதும், தவணை கட்டாததால் பைக்கை பறித்து சென்ற விரக்தியில் தீக்குளித்ததும் தெரிய வந்தது.

The post நிதி நிறுவனம் பைக்கை பறித்ததால் நடுரோட்டில் வாலிபர் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: