கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் தற்சார்பில் கவனம்: பிரதமர் மோடி தகவல்


புதுடெல்லி: கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் பாதுகாப்பு துறையை நவீனமயமாக்கவும், தற்சார்படையவும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி அரசு ஒன்றியத்தில் 11 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய தனது பதிவில் பாதுகாப்பு துறை குறித்து பிரதமர் மோடி, ‘‘கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறை குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டுள்ளது. பாதுகாப்பு உற்பத்தியை பொறுத்தவரை நவீனமயமாக்கல் மற்றும் தற்சார்பு அடைதல் ஆகிய இரண்டிலும் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவை வலிமையாக்கும் உறுதியுடன் நாட்டு மக்கள் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளனர் என்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என கூறி உள்ளார்.

The post கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் தற்சார்பில் கவனம்: பிரதமர் மோடி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: