இதன் காரணமாக பகல் நேரங்களில் நிலவும் இதமான காலநிலையில் வனப்பகுதியில் இருந்து யானைக் கூட்டம் வெளியேறி சாலையோரங்களில் உள்ள வனப்பகுதியில் குட்டிகளுடன் உலா வருகிறது. எனவே பகல் மற்றும் இரவு நேரங்களில் தேயிலைத் தோட்டங்கள், சாலைகளில் உலா வருவதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்,வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.யானைக்கள் இது போன்று உலா வரும் நிலையில் வனத்துறையினர் யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மேலும் யானைக் கூட்டம் முகாமிட்டு உள்ள பகுதிகளில் சுற்றுலா வருவோர் மற்றும் வாகன ஓட்டிகள் வன விலங்குகளை புகைப்படம் எடுப்பது அவற்றை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
The post தட்டப்பள்ளம் பகுதியில் காட்டு யானைகள் முகாம் appeared first on Dinakaran.