திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசிக்கின்றனர். ஆந்திராவில் கோடை விடுமுறை நீடிப்பதால் நேற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. அதன்படி நேற்று 84,418 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 34,900 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில் ரூ.3.89 ேகாடி காணிக்கை கிடைத்தது.
இன்று காலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் 29 அறைகளில் பக்தர்கள் நிரம்பியிருந்தனர். இவர்களில் நேர ஒதுக்கீடு இன்றி சர்வதரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post 12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.