விடாது கொட்டித்தீர்க்கும் மழை; வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: அசாமில் மட்டும் 4 லட்சம் பேர் தவிப்பு

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலமான அசாம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. அருணாச்சல் மாநிலத்தில் கனமழையால் இதுவரை 10 பேர் பலியாகி விட்டனர். 23 மாவட்டங்களில் உள்ள 156 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் 19,811 பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறுகளில் வெள்ளம் பெ 47 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் மருத்துமனையில் இருந்து நோயாளிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தில் வெள்ள நிலைமை அபாயமாக மாறி உள்ளது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 15 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. 4 லட்சம் மக்கள் தவிக்கிறார்கள். மிசோரம் மாநிலத்தில் 3வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகி விட்டனர். 211 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா சென்ற 1500 பேர் திரும்ப முடியாவில் வடக்கு சிக்கிமில் சிக்கித்தவிக்கிறார்கள்.

ராணுவ முகாமில் நிலச்சரிவு: 3 வீரர்கள் பலி; 6 பேர் மாயம்
சிக்கிம் மாநிலம் சேட்டன் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 வீரர்கள் பலியாகி விட்டனர். 6 பேர் மாயமாகி விட்டனர். 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

The post விடாது கொட்டித்தீர்க்கும் மழை; வெள்ளத்தில் தத்தளிக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: அசாமில் மட்டும் 4 லட்சம் பேர் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: