கரூர், ஜூன் 3: கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் முதல்முறையாக 161 இடங்களில் இன்று அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில்,கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் வி.செந்தில்பாலாஜி ஏற்பாட்டின்கீழ் கரூர் மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக வார்டு பகுதிகளில் 161 இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. குறிப்பாக, கரூர் மாநகர பகுதியில் 30 இடங்கள், கரூர் ஒன்றிய பகுதியில் 20, தான்தோன்றி ஒன்றியம் 20, கிருஷ்ணராயபுரம் 15, குளித்தலை15, கடவூர் 15, தோகைமலை 15 , கே.பரமத்தி 16, அரவக்குறிச்சி 15 என மொத்தம் 161 இடங்களில் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
The post கலைஞர் பிறந்தநாள் முதல்முறையாக 161 இடங்களில் அன்னதானம் appeared first on Dinakaran.