சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருந்தது. பிற மாவட்டங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. குறிப்பாக தஞ்சாவூர், சென்னை, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் கூடுதலாக வெப்பநிலை இருந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று அதிகபட்ச வெயில் வேலூர், மதுரை மாவட்டங்களில் 106 டிகிரி கொளுத்தியது. ஈரோடு, பாளையங்கோட்டை, திருச்சி, கரூர், திருத்தணி தலா 104 டிகிரி, தஞ்சாவூர், சென்னை தலா 102 டிகிரி, சேலம், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் தலா 100 டிகிரி, கடலூர், புதுச்சேரியில் தலா 99 டிகிரி இருந்தது.
The post வேலூர், மதுரையில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.