ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண் சிக்கலுக்கு தீர்வு: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான எண்களை கொண்ட வாக்காளர் அட்டை சிக்கலை தேர்தல் ஆணையம் தீர்த்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் இருப்பது குறித்த பட்டியல்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த சிக்கல் விரைவில் சரி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்து இருந்தது. இந்நிலையில் ஒரே மாதிரியான எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை சிக்கலை தேர்தல் ஆணையம் தற்போது தீர்த்து வைத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபோன்ற ஒரே எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்றும் சராசரியாக நான்கு வாக்குச்சாவடிக்கு ஒன்று தான் இதுபோன்று இருந்ததாகவும் கூறப்படுகின்றது. கள அளவிலான சரிபார்ப்பின்போது இதுபோன்று ஒரே அடையாள அட்டை எண் வைத்திருப்பவர்கள் வெவ்வேறு சட்டமன்ற தொகுதிகள் மற்றும் வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் உண்மையான வாக்காளர்கள் என்பது கண்டறியப்பட்டது. ஒரே எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கு புதிய எண்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது.

The post ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண் சிக்கலுக்கு தீர்வு: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: