புதுடெல்லி: பாக். தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற இந்தியா கெடு விதித்துள்ளது. பஹல்காம் தாக்குதல், அதை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த 4 நாள் போரால் இருதரப்பு உறவு சீர்குலைந்து விட்டது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி தனது அலுவலகத்திற்கு வெளியே நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்தியா நேற்று அவரை வெளியேற்றியது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
The post 24 மணி நேரத்தில் வெளியேற பாக்.தூதரக அதிகாரிக்கு இந்தியா திடீர் கெடு appeared first on Dinakaran.