பணம் கொடுத்து வெகு நாட்களாகியும் லாபத்தொகை எதையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டபோது அதனை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து விக்னேஷ் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பிஜு அலெக்ஸ், சுகன்யா, மார்க்ரேட் இலியாஸ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை சின்னியம்பாளையம், கரையாம்பாளையம் மைலம்பட்டி சேர்ந்த நீனா (43) என்பவரிடம் பிஜு அலெக்ஸ் கோடிக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கூறியதாவது: பாஜ சிறுபான்மையினர் அணியின் மாநில துணைத்தலைவரான பிஜு அலெக்ஸ் கோவை பீளமேடு பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி பெண்கள் உட்பட ஏராளமானோரிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை பணத்தைப் பெற்று தனது மனைவியின் வங்கிக்கணக்கிற்கும், தனது உறவினர்கள் வங்கிக்கணக்கிற்கும் மாற்றிவிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு, குனியமுத்தூர், சூலூர், கருர் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளோம். மேலும் இவரால் ஏமாற்றப்பட்டவர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் தெரிவித்து வருகின்றனர். இவரை கைது செய்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றனர்.
The post ரியல் எஸ்டேட்டில் அதிக லாபம் தருவதாக ரூ.10 கோடி சுருட்டிய பாஜ நிர்வாகி: பொள்ளாச்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.