இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீசார், ஓட்டுனர் பிரசாத்தை கைது செய்து அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர். அவர் மீது, கண்மூடித்தனமாகவும் கவனக்குறைவாகவும் வண்டி ஓட்டுதல், உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை காயப்படுத்துதல், உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை மோசமாகக் காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஓட்டுனர் செல்பேசியில் பேசிக் கொண்டே ஓட்டியதால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை சென்னை சைதாப்பேட்டை 9வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரமணியம் முன்பு நடைபெற்றது.
ஓட்டுநர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம் ஆஜராகி, ஓட்டுனரின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்படவில்லை. அவர் செல்போனில் பேசவில்லை. தொழில்நுட்ப கோளாறு தான் காரணம். ஓட்டுனர் இருக்கை திடீரென்று கழன்றதால், பேருந்தின் ஸ்டேரிங் லாக் ஆகி விபத்து ஏற்பட்டது. இதை திசை திருப்ப அப்போதைய அரசு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கியது. விபத்து நடந்த பேருந்தில் பயணித்தவர்களில் 3 பேர் சொன்ன சாட்சியத்தில் ஓட்டுநரின் இருக்கை கழன்று விழுந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளனர் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, டிரைவர் பிரசாத்தை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். ஏற்கனவே, டிரைவர் பிரசாத்தை பணி நீக்கம் செய்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
The post அண்ணா மேம்பாலத்தில் 2012ல் நடந்த விபத்து பேருந்து ஓட்டுநர் விடுதலை: சென்னை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.