நள்ளிரவில் கதவை தட்டும் சத்தம் கேட்டு மனைவி கீதா வெளியே சென்ற போது, மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டியதாகவும், தடுக்க முயன்ற தன்னையும் குத்தியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கீதாவையும், ஜெகதீசனையும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெகதீசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, கீதாவின் தாய் தனலட்சுமி, பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கீதாவிற்கும், மருமகன் ஜெகதீசனுக்கும் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்தது. எனவே, அவர் மகளை கொலை செய்திருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
பேச்சுவார்த்தை இன்றி ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெகதீசன், கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, போலீசிடம் சிக்காமல் இருக்க தன்னையும் கத்தியால் குத்திக்கொண்டு மர்மநபர்கள் தாக்கியதாக நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து எஸ்.பி. ராஜேஷ்கண்ணா கூறுகையில், ‘வீட்டில் வெளிநபர்கள் வந்து சென்றதற்கான எந்த தடயமும் இல்லை. கீதாவிற்கு கழுத்தில் சூரிகத்தி கொண்டு அறுத்தது போல் காயம் மட்டுமே இருந்தது. ஜெகதீசனுக்கு ஏற்பட்ட காயங்களை வைத்து பார்க்கும்போது, தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்டது போல் இருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில், அவரிடம் நடத்திய விசாரணையில் உண்மை வெளியானது,’ என்றார்.
The post மனைவியை குத்தி கொன்றுவிட்டு மர்மநபர்கள் தாக்கியதாக நாடகம்: இந்து முன்னணி நிர்வாகி கைது appeared first on Dinakaran.