இதையடுத்து அந்த யானை குட்டியின் தாய் யானையை கண்டறிந்து, அதனுடன் சேர்ப்பதற்கான முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டனர். அப்போது, வனப்பகுதிக்குள் சுற்றி திரிந்த ஒரு பெண் யானையுடனும், மற்ற யானை கூட்டங்களுடனும் குட்டி யானையை வனத்துறையினர் சேர்த்து வைக்க முயன்றனர். ஆனால், ஐந்து முறைக்கு மேல் வனத்துறையினர் தொடர்ந்து சேர்த்து வைத்த நிலையில், யானை குட்டியை காட்டு யானைகள் ஏற்றுக்கொள்ளாமல் தவிர்த்து வந்தன.
இதனால், யானை குட்டியின் வயதினையும், கடுமையான வெப்பநிலையையும் கருத்தில் கொண்டு உயரதிகாரிகள் ஆலோசனைப்படி, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு யானை குட்டி நேற்று கொண்டு செல்லப்பட்டது.
The post தாயால் கைவிடப்பட்ட யானை குட்டி தெப்பக்காடு முகாமில் சேர்ப்பு appeared first on Dinakaran.