வணிகர்களின் தீர்மானங்களை படிப்படியாக முதல்வர் தீர்ப்பார்: வணிகர் சங்க மாநாட்டில் விக்கிரமராஜா பேச்சு

சென்னை: மதுராந்தகத்தில் நடந்த வணிகர் சங்க மாநாட்டிற்கு தலைமை வகித்து, மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது: தமிழகத்தில் வணிகர் நலம் காக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. மே 5ம் தேதி வணிகர் தினமாக அரசு அறிவிக்க வேண்டும். புகையிலை விற்றதாக காவல் துறையால் வணிகர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்ய வேண்டும். திமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் வணிகர்களின் நலம் காக்கப்படுகிறது. தமிழக அரசு அறிவித்த வணிகர் நல வாரியத்தில் 47 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வணிகர் சேம நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை கட்டுப்படுத்தி வணிகர் வாழ்வில் தமிழக முதல்வர் விளகேற்றி உள்ளார்.

தமிழக முதல்வர் வணிகர் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் உரிய அதிகாரிகள் கொண்டு பரிசீலனை செய்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கான வரியை குறைக்க வேண்டும். திராவிட மாடல் அரசின் முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். வணிகர்களுக்கான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றுவதில் தமிழக அரசுக்கும் சில வருமானம் சார்ந்த சிக்கல்கள் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வணிக வரித்துறை அமைச்சர், அதிகாரிகள், வணிக சங்க நிர்வாகிகளை கலந்து ஆலோசித்து இதற்கு தீர்வு காண வேண்டும். வணிகர்களின் அனைத்து நலன் சார்ந்த கோரிக்கைகளும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனை கனிவோடு பரிசீலனை செய்து வணிகர்களின் குறைகளை படிப்படியாக தீர்த்து வைப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post வணிகர்களின் தீர்மானங்களை படிப்படியாக முதல்வர் தீர்ப்பார்: வணிகர் சங்க மாநாட்டில் விக்கிரமராஜா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: