அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் ரெட்டிகான் மாநாடு 1500க்கும் மேற்பட்ட விழித்திரை சிறப்பு நிபுணர்கள் பங்கேற்பு

சென்னை: டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 15வது ரெட்டிகான் மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது. “விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்” என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் 1500 க்கும் அதிகமான விழித்திரை சிறப்பு நிபுணர்கள், கண் மருத்துவம் பயிலும் முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொது கண் மருத்துவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் அமர் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலிருந்தும் மற்றும் பிற நாடுகளிலிருந்தும் வருகை தந்திருக்கும் நிபுணர்கள் உட்பட, 30-க்கும் கூடுதலான பிரபல பேச்சாளர்கள் விழித்திரை சிகிச்சையில் முக்கியமான தலைப்புகளின் கீழ் ஆறு அறிவியல் அமர்வுகளை நடத்தினர். அதிக சவால்மிக்க சிகிச்சை நேர்வுகளை காட்சிப்படுத்தி, ரெட்டினா ப்ரீமியர் லீக் என்ற உற்சாகமூட்டும் போட்டி நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

நவீன உத்திகள், புதுமையான அறுவைசிகிச்சை அணுகுமுறைகள், வளர்ந்து வரும் சிகிச்சை விருப்பத்தேர்வுகள் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய ஒரு தனித்துவமான வாய்ப்பை விழித்திரை சிறப்பு நிபுணர்களுக்கும், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் மற்றும் பொது கண் மருத்துவர்களுக்கும் ரெட்டிகான் 2025 நிகழ்வு வழங்கியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் அகில இந்திய கண் சிகிச்சையியல் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் மோகன் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் ரெட்டிகான் மாநாடு 1500க்கும் மேற்பட்ட விழித்திரை சிறப்பு நிபுணர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: