சென்னை: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வேலூர் சென்றுவிட்டு, டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் நோக்கி காரில் சென்றார். குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே ஜே.பி.நட்டா பயணம் செய்த கார் பழுதாகி நின்றது. அப்போது பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி லேசான விபத்துக்குள்ளானது.