சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை சந்திப்பில் மதுபோதையில் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளரைக் கல்லால் தலையில் தாக்கிய ரவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லால் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றபோது மற்றொருவரைப் போக்குவரத்து காவலர் அவர்களை விரட்டிப் பிடித்து நீலாங்கரை சட்டம் ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைத்தார்.