தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மண்டபம், மே 3: பிரப்பன்வலசை கிராமத்தில் இயங்கிவரும் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக கட்டிடம் சேதமடைந்து உள்ளதால், அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை கிலாமத்தில் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் பிரப்பன்வலசை, இருமேனி, நொச்சுயூரணி, சாத்தக்கோன்வலசை உள்பட பல ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த சங்கத்தில் விவசாயிகளுக்கான கடன் வழங்குவது சேமிப்பு பெறுவது, அரசு வழங்கும் வீடு கட்ட திட்டம் உள்பட விவசாயிகளுக்கு வழங்கும் பல சலுகை திட்டங்களை போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இந்த கூட்டறவு சங்க கட்டிட அலுவலகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த அலுவலக கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து மழைநீர் உள்வாங்கி கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்துள்ளது. எனவே, பழைய அலுவலக கட்டிடத்தை அகற்றி அரசு வேளாண்மை கூட்டறவு சங்க அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: