பரமக்குடி சித்திரை திருவிழாவிற்கு ராட்டினம் அமைக்க நீதிமன்றம் அனுமதி

பரமக்குடி, மே 3:பரமக்குடியில் ஆண்டுதோறும் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறும். மதுரை அழகர் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவை போன்று, ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும்.

இந்த திருவிழாவில் ஆண்டுதோறும் வைகை ஆற்றில் பொழுதுபோக்கிற்காக ராட்டினங்கள் அமைக்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு வைகை ஆற்றில் தண்ணீர் வந்ததால் பாதுகாப்பு கருதி ராட்டினம் அமைப்பதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் திருவிழா களையிழந்து காணப்பட்டது.

இந்நிலையில், பொது மக்களின் பொழுதுபோக்கிற்காக ராட்டினம் அமைக்க அனுமதி வழங்க கோரி பிரபாகரன், முனியாண்டி, பாண்டித்துரை கார்த்திகேயன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து, ராட்டினம் அமைப்பதற்கு அனுமதி பெற்றுள்ளனர். இதனால், தற்போது வைகை ஆற்றில் ராட்டினம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post பரமக்குடி சித்திரை திருவிழாவிற்கு ராட்டினம் அமைக்க நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: