மானாமதுரை, மே 3: மானாமதுரை சித்திரை திருவிழாவினை முன்னிட்டு அதிமுக பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் நகர் முழுவதும் அனுமதியின்றி ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட சிலர் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்திருந்தனர்.
இதையடுத்து பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு கடிதம் அனுப்பபட்டது. இதன் எதிரொலியாக மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை தாங்களாவே அகற்ற வேண்டும், தவறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தபட்டவர்களுக்கு அறிவுறுத்தினர். இதன்படி நேற்று மானாமதுரையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
The post மானாமதுரையில் பிளக்ஸ், பேனர்கள் அகற்றம் appeared first on Dinakaran.