அங்கன்வாடி ஊழியர் காத்திருப்பு போராட்டம்

சிவகங்கை, மே 3: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெயமங்களம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாக்கியமேரி கோரிக்கைகளை விளக்கி பேசினார். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

கூடுதல் பொறுப்பு வகிக்கும் மையங்களுக்கான இன்சார்ஜ் அலவன்ஸ் தொகையை ரூ.5,000ஆக உயர்த்த வேண்டும். உணவு தயாரிப்பிற்கு வழங்கப்படும் செலவுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் கவுசல்யா மற்றும் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post அங்கன்வாடி ஊழியர் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: