புதுடெல்லி: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவை குறித்து தவறான செய்திகள், மத மோதல்களை தூண்டும் விதமாக செய்தி வெளியிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியா சமீபத்தில் தடை விதித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பராமரிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலுக்கு இந்தியா தடை appeared first on Dinakaran.