ரூ.6,266 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன: ரிசர்வ் வங்கி தகவல்

புதுடெல்லி: கடந்த 2023,மே 19ம் தேதி உயர் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள் அந்த நோட்டுகளை வங்கிகளில் திரும்ப செலுத்தினர். அந்த நேரத்தில், புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாகும்.

அதன்படி இந்தாண்டு ஏப்ரல் 30ம் தேதி, 98.24 சதவீதம் நோட்டுகள் திரும்ப வந்து விட்டன. ரூ.6,266 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை. மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்த ரூ.2000 ரூபாய் நோட்டுகளில் 98.24 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்ய அல்லது மாற்றி கொள்ளும் வசதி அனைத்து வங்கி கிளைகளிலும் 2023 அக்டோபர் 7 வரை இருந்தது. அதன் பின்னர் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அவற்றை மாற்றி கொள்ளவோ அல்லது டெபாசிட்டோ செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.6,266 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: