சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து நாட்டில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் ஒன்றாம் தேதி நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் மே மாதத்தின் முதல்நாளான இன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலை மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1906 ரூபாய்க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதே நேரம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.868.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.
The post சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15.50 ரூபாய் குறைப்பு appeared first on Dinakaran.