கோவை: கோவை மாவட்டம் நரசிம்மநாய்க்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், நேற்று காலை பசு மாடு ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த 5 தெருநாய்கள் தனியாக இருந்த அந்த மாட்டினை சுற்றி வளைத்து கடித்து குதறியது. மாடு கட்டப்பட்டு இருந்ததால் அதனால் தப்பி ஓட முடியாமல், நாய்களிடம் கடிவாங்கும் நிலை ஏற்பட்டது. இதனைப்பார்த்த தோட்டத்தின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து நாய்களை அவர் விரட்டி அடித்து, மாட்டினை காப்பாற்றினார். இருப்பினும், மாட்டின் கால்கள் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அந்த மாட்டிற்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாய்கள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கி வருவது அதிகரித்து வருவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
The post பசு மாட்டை கடித்து குதறிய தெருநாய்கள் appeared first on Dinakaran.