சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: ரூ.100 நாணயம் வெளியீடு


புதுடெல்லி: சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவாக ரூ.100 நாணயத்தை ஒன்றிய அரசு வெளியிடுகிறது. இதுகுறித்து அரசு அதிகாரி கூறுகையில், ஸ்ரீசத்ய சாய் பாபா,ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் கடந்த 1926, நவம்பர் 23ல் பிறந்தார்.14 வயதில், அவர் தனது தெய்வீகப் பணியைத் தொடங்கினார். சாய்பாபா அனைத்து மதங்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார் என்று தெரிவித்தார். அவரது நூற்றாண்டையொட்டி ரூ.100 நாணயத்தை ஒன்றிய அரசு வெளியிகிறது. இதற்கான உத்தரவை ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது என்றார்.

The post சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: ரூ.100 நாணயம் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: