அம்பேத்கர் பிறந்தநாள் விழா குடியரசு தலைவர், பிரதமர் மலர் அஞ்சலி செலுத்தினர்

புதுடெல்லி: அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது சொந்த ஊரான மபியின் அம்பேத்கர் நகரில் இருந்து ராஜஸ்தானின் கோட்டா வழியாக டெல்லிக்கு புதிய ரயில் சேவையை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் மபி முதல்வர் மோகன் யாதவ் நேற்று தொடங்கி வைத்தனர்.

The post அம்பேத்கர் பிறந்தநாள் விழா குடியரசு தலைவர், பிரதமர் மலர் அஞ்சலி செலுத்தினர் appeared first on Dinakaran.

Related Stories: