இதையடுத்து அவர் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை வழக்கு தொடர்பாக சந்தித்தார். அப்போது அவரிடம் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வக்குமார் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், செல்வக்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை கொடுத்தனர். அதனை இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவிடம் செல்வக்குமார் நேற்று கொடுத்த போது அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெண் இன்ஸ்பெக்டரை கைது செய்தனர்.
The post ஆள் கடத்தல் வழக்கில் வாகனத்தை விடுவிக்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது appeared first on Dinakaran.